மாவட்ட செய்திகள்

ஆலந்துரையார் கட்டளை, சுண்டக்குடி கிராமங்களில் 20 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி

ஆலந்துரையார் கட்டளை, சுண்டக்குடி கிராமங்களில் 20 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி.

தினத்தந்தி

அரியலூர்,

அரியலூர் வட்டார வேளாண்மை துறையின் மானாவாரி நிலமேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் ஆலந்துரையார் கட்டளை, சுண்டக்குடி ஆகிய கிராமங்களில் உள்ள மானாவாரி நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், ஏரி, குளக்கரைகளில் மொத்தம் 20 ஆயிரம் பனை விதைகளை வேளாண்மை உதவி இயக்குனர் பூவலிங்கம், வேளாண்மை அலுவலர் சவீதா, உதவி வேளாண்மை அலுவலர் சுப்ரமணியன் மற்றும் பள்ளி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் நட்டனர். அப்போது வேளாண்மை உதவி இயக்குனர் பூவலிங்கம் கூறுகையில், குறைந்தளவு நீரைக் கொண்டு தாக்கு பிடிக்கும் தன்மை பனை மரங்களுக்கு உண்டு. இன்னும் செல்லப்போனால் வறட்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய நீர் மட்டத்தை பனைமரங்களே பாதுகாப்பதாக பனை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பனைமரத்தில் இருந்து பதநீர், நுங்கு, பனங்கள்ளு, பனைவெல்லம், பனங்கற் கண்டு, பனங்கிழங்கு போன்ற 801 வகையான உணவு மற்றும் பயன்பாட்டு பொருட் கள் கிடைக்கின்றன. மேலும் இத்திட்டத்தின் கீழ் பனை விதைகளை விருப்பமுள்ள விவசாயிகள் தங்களின் வயல் வரப்பில் நடவு செய்து பயன்பெறலாம். மேலும் தொகுப்பு கிராமங்களில் உள்ள ஓடைவாரி போன்ற நீர் நிலைகளில் நடும் போது, ஆக்கிரமிப்புகளை தடுத்து நீராதாரத்தையும் பாதுகாக்க முடியும் என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்