மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில் அரியலூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தினத்தந்தி

அரியலூர்,

ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் பஸ் நிலையம், தேரடி, சத்திரம் வழியாக சென்று நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. முன்னதாக ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் துணிப்பைகளை வழங்கினார். இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சேரலாதன், நகராட்சி ஆணையர் திருநாவுகரசு, உதவிப்பொறியாளர்கள் பிரபாகரன், இளமதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்