மாவட்ட செய்திகள்

பிளஸ்-1 தேர்வில் தோல்வி, தூக்குப்போட்டு மாணவி தற்கொலை

பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்ததால், மனமுடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தினத்தந்தி

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தானிமூலா பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகள் சுபலட்சுமி(வயது 16). பிதிர்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியானது. இதில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாமல் சுபலட்சுமி தோல்வி அடைந்தார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு சுபலட்சுமியின் பெற்றோர் குந்தலாடி கடை வீதிக்கு சென்றனர். பின்னர் பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் வீடு திரும்பினர்.

இதற்கிடையில் வீட்டில் யாரும் இல்லாததால் சுபலட்சுமி தனது துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த பெற்றோர் தனது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து நெலாக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வில் தோல்வி அடைந்ததால், மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு