மாவட்ட செய்திகள்

கூடலூரில் போலீசார் கொடி அணிவகுப்பு

கூடலூரில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கூடலூர்

நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நடத்துவதற்காக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகளில் 44 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது.

இதில் உத்தேசமாக பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடி என 16 கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடலூர் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதற்காக கூடலூரில் போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

பேரணி கூடலூர் செம்பாலாவில் தொடங்கி தொடங்கி துப்பு குட்டிபேட்டை, பழைய பஸ் நிலையம், மைசூர் மெயின் ரோடு வழியாக புதிய பஸ் நிலையம் அடைந்தது. தொடர்ந்து அங்கிருந்து ஆர.டி.ஓ. அலுவலகம் வழியாக கூடலூர் போலீஸ் நிலையத்தை பேரணி சென்றடைந்தது. பேரணிக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் தலைமையில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை