அப்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் போலீஸ் ஏட்டு கிருஷ்ணகுமார், அக்கம் பக்கத்தினருடன் வாக்குவாதம் செய்தார். அப்பகுதியில் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்களை கீழே தள்ளிவிட்டதுடன், அருகில் இருந்தவர்களை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி கடும் வாக்குவாதம் செய்தார். ஒருகட்டத்தில் தனது டிரவுசரை கழற்றி, அங்கிருந்த பெண்களிடம் ஆபாசமான வார்த்தைகளால் பேசினார்.
இதுகுறித்து அப்பகுதியினர் கொடுத்த புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரையும் அவர் தகாத வார்த்தைகளால் பேசினார். போலீஸ் ஏட்டுவின் இந்த ரகளைகளை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுபற்றி அம்பத்தூர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.