சென்னை,
சென்னை போக்குவரத்து போலீஸ் திட்ட பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் செல்வகுமார். இவர் டி.பி.சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசித்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதில், தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார்.
பலியான செல்வகுமாருக்கு கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சித்தேரி சொந்த ஊராகும். சென்னை போலீசில் கொரோனா தொற்றால் இதுவரை 28 பேர் உயிர்ப்பலி ஆகி உள்ளனர். கொரோனா 2-வது அலையில் உயிர்ப்பலி அதிகமாக உள்ளது.