மாவட்ட செய்திகள்

சேத்துப்பட்டு-எழும்பூர் இடையே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த போலீஸ்காரர் பலி

சென்னையை அடுத்த மேலக்கோட்டையூர் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் மோகன் (வயது 41). 2002-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த இவர், கீழ்ப்பாக்கம் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல மோகன் தனது வீட்டில் இருந்து பணிக்கு புறப்பட்டார். தாம்பரம் ரெயில் நிலையம் வந்து, அங்கிருந்து, ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எழும்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.

தினத்தந்தி

ரெயில் சேத்துப்பட்டு-எழும்பூர் ரெயில் நிலையம் இடையே வந்து கொண்டிருந்த போது, படியில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் மோகன், தீடீரென கால் தவறி ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்தார். தகவலின் பேரில் எழும்பூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாலினி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்