ஸ்ரீரங்கம்,
நாட்டில் வறட்சி நீங்கி காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வேண்டியும், காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடவும், ஏரி, குளம், கிணறு போன்ற நீர்நிலைகள் நிரம்பி வழியவும், மரம், செடி, கொடிகள் தழைத்தோங்கவும், குறை ஏதும் இல்லாமல் உயிர்கள் வாழ வேண்டியும் அகில பாரதீய துறவியர் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் நேற்று வருணஜெபம் மற்றும் பர்ஜன்ய ஹோமம், விராடபருவ பாராயணம் ஆகியவை நடைபெற்றன.
அம்மாமண்டபம் படித்துறையில் இருந்த தொட்டியில் சிதம்பரம் யாகப்பா தீட்சிதர் தலைமையில் கழுத்தளவு நீரில் மூழ்கியபடி தீட்சிதர்கள் வருண ஜெபம் செய்தனர்.
ஜீயர்
இதில் ராஜமன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் சுவாமி ராமானந்தா, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணைஆணையர் ஜெயராமன், கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர் மற்றும் துறவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.