மாவட்ட செய்திகள்

மேம்பால தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கர்ப்பிணி பலி

வராத்திரியில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது மேம்பால தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கர்ப்பிணி பலியானார். படுகாயம் அடைந்த சமையல் தொழிலாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

கிணத்துக்கடவு

சிவராத்திரியில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது மேம்பால தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கர்ப்பிணி பலியானார். படுகாயம் அடைந்த சமையல் தொழிலாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிவராத்திரி விழா

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சடையை கவுண்டன் புதூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21), சமையல் தொழிலாளி. இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மகேஸ்வரி (20) என்பவருடன் திருமணமானது. மகேஸ்வரி 6 மாத கர்ப்பமாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவராத்திரி விழா என்பதால் மணிகண்டனும், மகேஸ்வரியும் மோட்டார் சைக்கிளில் கோவை வந்தனர். பின்னர் அவர்கள் கோவையில் நடந்த சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டனர்.

தடுப்புச்சுவரில் மோதியது

தொடர்ந்து காலையில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்கள். காலை 7 மணியளவில் கிணத்துக்கடவில் உள்ள மேம்பாலத்தில் 2 பேரும் சென்றபோது திடீரென்று நிலைதடுமாறி மேம்பாலத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கர்ப்பிணி பலி

அங்கு மகேஸ்வரியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடும் மணிகண்டனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு