மாவட்ட செய்திகள்

ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகை

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

தினத்தந்தி

சென்னை

ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு டெல்லியில் புறப்படும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நண்பகல் 12.45 மணிக்கு சென்னை வந்தடைகிறார். மாலை 5 மணிக்கு நடைபெறும் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்று முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் , சபாநாயகர் அப்பாவு மற்றும் துணை சபாநாயகர் பிச்சாண்டியும் பங்கேற்கின்றனர். ஆக்ஸ்ட் 3 முதல் 6ஆம் தேதிவரை நீலகிரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். ஜனாதிபதியின் வருகையையொட்டி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்