மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சியில் தனியார் பஸ்கள் ஓடவில்லை

50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பொள்ளாச்சியில் தனியார் பஸ்கள் ஓடவில்லை.

பொள்ளாச்சி

50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பொள்ளாச்சியில் தனியார் பஸ்கள் ஓடவில்லை.

தனியார் பஸ்கள்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த நேற்று முதல் பஸ், வாடகை கார், ஆட்டோ உள்ளிட்டவைகளை 50 சதவீத பயணிகளுடன் இயக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது.

மேலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை திறக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொள்ளாச்சியில் பொதுமக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

இதற்கிடையில் தனியார் பஸ் ஓடவில்லை. மேலும் அரசு பஸ்களும் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. மேலும் பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கமாக 3 கிளைகளில் இருந்து 220 பஸ்கள் இயக்கப்படும்.

ஆனால் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால் 180 பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதுகுறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது:-

டீசல் விலை உயர்வு

பொள்ளாச்சியில் இருந்து 87 தனியார் பஸ்கள் இயக்கப் பட்டன. இதற்கிடையில் 50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரு நாளைக்கு பஸ்சிற்கு மட்டும் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை டீசல் போட வேண்டும். இதை தவிர டிரைவர், கண்டக்டர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

குறைந்தது ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் வருமானம் கிடைத்தால் தான் சமாளிக்க முடியும். டீசல் விலை உயர்ந்து கொண்டு செல்கிறது. மேலும் காப்பீட்டு கட்டணம், வரி போன்றவைகளும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் 50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்கினால் நஷ்டம் ஏற்படும். தற்போது பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது. மேலும் ஏற்கனவே உள்ள கட்டணம் தான் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

நஷ்டத்தில் இயக்க முடியாது என்பதால் பஸ்களை இயக்கவில்லை. இதன் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை