மாவட்ட செய்திகள்

30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்

30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகையில் தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மண்டல கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் செல்வன், அமைப்பு செயலாளர் ஜெயவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் ஜான்சிம்சன் வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் கலந்துகொண்டுபேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

குடும்பத்தை விட்டு நீண்ட தொலைவில் பணியாற்றி வரும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்துவது. 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அலுவலகங்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதியை செய்து தரவேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன் படி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தகுதியானவர்களே மாவட்ட நியமன அலுவலர்களாக பணியாற்ற வேண்டும். எனவே நீதி மன்ற தீர்ப்புகளின் படி உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலர்களை மாவட்ட நியமன அலுவலர்களாக பதவி உயர்வின் அடிப்படையில் நிரப்ப வேண்டும். தமிழக அரசும், மாநில உணவு பாதுகாப்பு ஆணையரகமும் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வருகிற அக்டோபர் மாதம் 9-ந்தேதி ஆணையரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை