மாவட்ட செய்திகள்

புரட்டாசி 2-வது சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

தினத்தந்தி

தூத்துக்குடி,

புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி மாதத்தின் 2-வது சனிக்கிழமை என்பதால் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. பெருமாள் குருவாயூரப்பர் அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனால் நேற்று கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர்.

கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 6 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 7.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது.

காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவில் நுழைவு வாயிலில் பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. கிருமி நாசினி தெளித்தல், பக்தர்கள் கொண்டுவரும் காணிக்கை பொருட்கள் தனி பாத்திரங்களில் வைக்கவும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது.

கயத்தாறில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் பூலுடையார் சாஸ்தா கோவிலில் பக்தர்கள் கார், வேன் இதர வாகனங்களில் வந்து பொங்கலிட்டு மொட்டை அடித்தனர். திருநீலகண்ட ஈஸ்வரர் கோவிலில் உள்ள பெருமாளுக்கு அனைத்து அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நவத்திருப்பதிகளில் உள்ள 9 கோவில்களான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய கோவில்களில் பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர். இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. அதன்பின் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். கோவில் வாசலில் கைகளை சுத்தம் செய்தபின் உள்ளே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மதியம் 2 மணி அளவில் 2 மணி நேரம் மழை பெய்த காரணத்தால் தரிசனம் சிறிது நேரம் தடைபட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு