மாவட்ட செய்திகள்

புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தினத்தந்தி

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே இயற்கை எழில் மிகுந்த புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

இந்த நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் மலைக்கிராமங்கள் வழியாக ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது.

பெரும்பாறை, கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, தடியங்குடிசை, குப்பமாள்பட்டி, கல்லக்கிணறு, ஆடலூர், பன்றிமலை மற்றும் அதை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது.

இதனால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

இதையறிந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் கார், மோட்டார் சைக்கிள்களில் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு படையெடுத்து வருகின்றனர்.

அவர்கள் நீர்வீழ்ச்சியில் ஆனந்தமாக குளித்து விட்டு செல்கின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்