மாவட்ட செய்திகள்

ஆலங்குடி ஊராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

ஆலங்குடி ஊராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்.

தினத்தந்தி

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் மோகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராசாத்தி சின்னப்பா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் குமரவேல் வரவேற்று பேசினார். முகாமில் 900-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவிற்கு வகைப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முகாமில் தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் கோபால், இளைஞர் அணி துணை அமைப்பாளர் மூர்த்தி, ஊராட்சி உறுப்பினர்கள் சித்ரா அன்பரசன், மதுபாலா மூர்த்தி, பன்னீர்செல்வம், ரவி, ரோசாப்பூ சுந்தரமூர்த்தி, கீர்த்தனா கார்த்திகேயன், கிளை செயலாளர்கள் ரவிச்சந்திரன், சுரேஷ், சண்முகம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்