மாவட்ட செய்திகள்

புதுச்சேரி அரசு அறிவித்த தொகை குறைவு: கிரண்பெடி- நாராயணசாமிக்கு ரூ.201 பொங்கல் பரிசு; மணியார்டர் அனுப்பி சமூக அமைப்பினர் நூதன போராட்டம்

தமிழகத்தில் பொங்கல் பரிசாக அரசு சார்பில் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கப்படுகிறது. ஆனால் புதுவையில் ரூ.200 மட்டுமே பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது.

தினத்தந்தி

இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தைப்போல் புதுச்சேரியிலும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோருக்கு சமூக அமைப்புகள் சார்பில் ரூ.201 பொங்கல் பரிசு மணியார்டர் அனுப்பும் போராட்டம் முதலியார்பேட்டை அஞ்சலகத்தில் நேற்று நடந்தது.

போராட்டத்தில் மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகநாதன், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன், சிந்தனையாளர் பேரவை செல்வம், தமிழர் களம் அழகர், ஆம் ஆத்மி ரவி சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?