மாவட்ட செய்திகள்

வெறிநாய் கடித்து 10 பேர் காயம்

தேன்கனிக்கோட்டை அருகே வெறிநாய் கடித்து 10 பேர் காயம் அடைந்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது சின்ன பென்னங்கூர். இந்த பகுதியில் 4-க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்டவர்களை கடித்து குதறியது.

இதில் வெறிநாய்கள் கடித்ததில் அந்த பகுதியைச் சேர்ந்த பச்சியம்மாள் (வயது 8), தாசம்மா (28), பூங்கொடி (55), மாதேவம்மா (35), கணபதி (55) ஆகியோர் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

மற்றவர்கள் ஓசூர் தனியார் மருத்துவமனையிலும், தேன்கனிக்கோட்டை தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அட்டகாசம் செய்து வரும் வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வெறிநாய்களை பிடிக்கும் பணியில் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை