மாவட்ட செய்திகள்

ரபேல் விமான பேர குற்றச்சாட்டுகளுக்கு இந்தி நடிகை மூலம் பா.ஜனதா பதிலடி

ரபேல் விமான பேர குற்றச்சாட்டுகளுக்கு இந்தி நடிகை மூலம் பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது. 2.19 நிமிட நேரம் ஓடும் வீடியோ படம் வெளியீடு இடம்பெற்றுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதை மறுத்து வரும் பா.ஜனதா, இந்த ஒப்பந்தத்தில் என்ன நடந்தது என்பதை இந்தி நடிகை பல்லவி ஜோஷியை வைத்து விளக்கம் அளித்துள்ளது.

பல்லவி ஜோஷி நடித்து, 2.19 நிமிட நேரம் ஓடும் வீடியோ படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு நேற்று வெளியிட்டது.

அதில், மலிவான விலையில் போர் விமானங்கள் வாங்குவதே ரபேல் ஒப்பந்தத்தின் நோக்கம். இதுபோல், ஏவுகணைகளையும் வாங்குவோம். அவற்றின் உதிரிபாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு ரூ.12 ஆயிரத்து 500 கோடி மிச்சம் ஆகியுள்ளது என்பதுதான் மிகவும் முக்கியமான விஷயம் என்று பல்லவி ஜோஷி கூறுகிறார்.

தனது பேச்சுக்கிடையே, உருளைக்கிழங்கு தொழிற்சாலை என்று யாரையோ பெயர் குறிப்பிடாமல் பல்லவி ஜோஷி கிண்டல் செய்வதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு