மாவட்ட செய்திகள்

நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா

நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

தினத்தந்தி

திருச்செந்தூர்:

நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் ராகு,கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராகு,கேது பெயர்ச்சி விழா

பிரசித்திபெற்ற ராகு, கேது திருத்தலம் தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி ஞானப்பிரசன்னாம்பிகை சமேத ஸ்ரீ காளத்தீஸ்வரர் கோவிலில் உள்ளது. இக்கோவிலில் ராகு, கேதுவுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

இக்கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நேற்று முன்தினம் மாலை 3.13 மணிக்கு நடைபெற்றது. இதை முன்னிட்டு ராகு- கேது பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேக பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

சிறப்பு யாகம்

முன்னதாக மாலை 3 மணிக்கு கும்ப கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது யாகத்தைத் தொடர்ந்து அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று தீபாராதனைக்குப் பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், மற்றும் பிரதோஷ அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி