மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் மழை: 45 வீடு-100 மின்கம்பங்கள் சேதம் மரம் விழுந்து மாடு சாவு

போச்சம்பள்ளி, மத்தூர் சுற்று வட்டாரத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் 45 வீடுகள், 100 மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. பழனம்பட்டியில் மரம் விழுந்ததில் மாடு செத்தது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, மத்தூர், வெப்பாலம்பட்டி, கீழ்குப்பம், பனங்காட்டூர், அரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
இதில் கீழ்குப்பத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவரின் வீட்டு மேற்கூரை சேதம் அடைந்தது. அதேபோல செல்வி, குப்பன் ஆகியோரின் வீடுகளும் தரைமட்டம் ஆனது. சரவணன் என்பவரின் ஒரு ஏக்கர் புடலங்காய் தோட்டம் சேதமடைந்தது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான தேங்காய்கள் கீழே விழுந்தன. இதைத் தவிர 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் பழுதடைந்தன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

விவசாயிகள் வேதனை

இந்த சூறைக்காற்றில் பழனம்பட்டியில் தென்னை மரம் விழுந்து பசுமாடு உயிர் இழந்தது. மழை இல்லாமல் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி தென்னை மரங்களுக்கு ஊற்றி விவசாயிகள் பாதுகாத்து வந்த நிலையில் சூறைக்காற்றில் ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இதுகுறித்து கீழ்குப்பம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தமிழரசன், மனோகரன் ஆகியோர் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் வீசிய சூறைக்காற்றால் ஏராளமான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. வீடுகளும் சேதமடைந்துள்ளன. மின் கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் எங்கள் பகுதியில் சேதங்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மத்தூர்

இதேபோல் மத்தூர் சுற்று வட்டாரத்தில் சூறைக்காற்றில் 24-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. சிவம்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்த பழனிசாமி, திருப்பதி ஆகியோருக்கு சொந்தமான ஓட்டு வீடுகள், கல்லேத்திப்பட்டியில் மாயக்கண்ணன் ஓட்டு வீடு, நடுப்பட்டியில் வள்ளியம்மாள் கூரை வீடு ஆகியவை சேதம் அடைந்தன.
மேலும் 50-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளின் கொட்டகைகள் சேதமடைந்தன.
ஒட்டப்பட்டி ஊராட்சியில் நடராஜ் என்பவருக்கு சொந்தமான தொகுப்பு வீடு சேதமடைந்தது. மேலும் மாதேஷ் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு சேதமடைந்தது. இதே போல மகேஷ் என்பவரின் கோழிப்பண்ணையில் இருந்த 50 கோழிகள் சூறாவளி காற்றில் தாக்கப்பட்டு இறந்தன.

மத்தூர் பஸ் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. போச்சம்பள்ளி, மத்தூர் சுற்று வட்டாரத்தில் வீசிய சூறைக்காற்றால் 45 வீடுகளும், 1,500-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும், 60 மரங்களும், 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சேதம் அடைந்தன.
மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை