மாவட்ட செய்திகள்

கர்நாடக அரசு சார்பில் இன்று ராஜ்யோத்சவா தின விழா - குமாரசாமி தேசிய கொடி ஏற்றுகிறார்

கர்நாடக அரசு சார்பில் இன்று(வியாழக்கிழமை) ராஜ்யோத்சவா தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்-மந்திரி குமாரசாமி தேசிய கொடி ஏற்றுகிறார்.

தினத்தந்தி

பெங்களூரு,

இன்று(வியாழக்கிழமை) கர்நாடகம் தனி மாநிலமாக உதயமான நாள் நாள் ஆகும். இதையொட்டி கர்நாடக அரசின் பொது கல்வித்துறை சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவா தின விழா பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது. சரியாக காலை 9 மணிக்கு முதல்-மந்திரி குமாரசாமி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார்.

அதன் பிறகு அவர் ராஜ்யோத்சவா தின உரையாற்றுகிறார். இந்த விழாவில் ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதே போல் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ராஜ்யோத்சவா தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நடைபெறும் விழாக்களில் அந்தந்த மாவட்ட பொறுப்பு மந்திரிகள் தேசிய கொடி ஏற்றுகிறார்கள். ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இன்று ராஜ்யோத்சவா விருது வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கமாகும்.

ஆனால் இந்த ஆண்டு இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்