மாவட்ட செய்திகள்

கோவில் கும்பாபிஷேகம், திருப்பணிக்காக மாமல்லபுரத்தில் தயாராகும் விநாயகர் சிலைகள்

மாமல்லபுரத்தில் பல சிற்பக்கலைக்கூடங்களில் கருங்கல்லால் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி

மாமல்லபுரம்,

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அன்று வீடுகள் மற்றும் தெருக்கள் தோறும் விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபடுவார்கள். மேலும் அன்று பழைய மற்றும் புதுப்பிக்கப்பட்ட விநாயகர் கோவில்களுக்கு, கருவறையில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படும். அதுபோல் விநாயகரை வாஸ்து முறைப்படி புது வீடுகளின் நுழைவு வாயிலில் வைத்தால் தோஷங்கள் நீங்கி நன்மைகள் கிடைக்கும் என்பதால் விநாயகர் கற்சிலைகளை வீடுகளில் வைப்பது வழக்கத்தில் உள்ளது.

இதற்காக மாமல்லபுரத்தில் பல சிற்பக்கலைக்கூடங்களில் கருங்கல்லால் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா நெருங்குவதால் பல இடங்களில் இருந்து கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், பக்தர்கள் மாமல்லபுரம் வந்து கற்சிலைகளை வாங்கிச் செல்கின்றனர். தற்போது 1 அடி முதல் 5 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளை சிற்பிகள் வடிவமைத்து விற்பனைக்கு வைக்க தொடங்கி உள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்