சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கூட்டுறவுத்துறையின் மூலம் கூட்டுறவு வங்கிகளில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினாகளுக்கு அடிப்படை பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சா பாஸ்கரன் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
கிராமப்புற பகுதிகள் வளாச்சி பெற, கூட்டுறவு வங்கிகள் சிறப்புடன் செயலாற்ற வேண்டும். இதற்காக கூட்டுறவுத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. அதற்கேற்ப விவசாயிகளுக்கு அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதில் கூட்டுறவு வங்கிகளுக்கு பெரும் பங்கு உண்டு. கூட்டுறவு வங்கிகளில் தலைவர் பொறுப்பு வகிக்கும் பிரதிநிதிகள் மக்களின் தேவைகளை உணாந்து செயலாற்ற வேண்டும்.
கிராமப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தேவைகளை கூட்டுறவு அமைப்பினரால் நிறைவேற்ற முடியும். பொதுவாக விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் அந்தந்த காலக்கட்டத்தில் தேவைக்கேற்ப உதவிகளை நாடிவருவார்கள். அவ்வாறு வருபவாகளின் தேவைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தங்களது கூட்டுறவு வங்கியின் மூலம் நகைக்கடன் மற்றும் மானியத்தில் உரம், விதைகள் போன்றவற்றை வழங்கும்போது அவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி பெறுவார்கள். அதேபோல் கிராமப்பகுதிகளிலுள்ள சுயஉதவிக்குழு பெண்களுக்கு தேவையான சுழல்நிதிக் கடன்களை வழங்கும் போது சுற்று வட்டார பகுதிகள் முழுவதும் சுயதொழில் உற்பத்தித்திறன் அதிகரிக்கும். இவ்வாறான செயல்பாட்டை உருவாக்குவது என்பது தலைவராக பொறுப்பேற்ற உங்கள் கையில்தான் உள்ளது.
நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணியும் கிராமத்திலுள்ள கடைக்கோடி மக்களையும் சென்றடையும். நீங்கள் பெற்றுள்ள இப்பதவியின் மூலம் உங்களால் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்து ஒவ்வொருவரையும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் பழனீஸ்வரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சந்திரன், துணைத்தலைவர் என்.எம். ராஜா, பாம்கோ கூட்டுறவு சங்கத்தலைவர் நாகராஜன், கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் ராஜேந்திரன் மற்றும் கூட்டுறவு சங்கத்தலைவர்கள், இயக்குனர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.