மாவட்ட செய்திகள்

ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது ஊழியர்களுக்கு உறவினர்கள் பாராட்டு

ஒரத்தநாடு அருகே ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி (வயது35). நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரை செய்தனர். இதையடுத்து ராஜேஸ்வரியை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊழியர்கள் தஞ்சைக்கு அழைத்து சென்றனர்.

ஓடும் ஆம்புலன்சில் பிரசவம்

ஆம்புலன்ஸ் ஒரத்தநாடு அருகே மேலஉளூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ராஜேஸ்வரிக்கு திடீரென்று பிரசவ வலி அதிகமானது. இதனால் ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் மேகலா, ராஜேஸ்வரிக்கு ஓடும் ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அப்போது ராஜேஸ்வரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து ராஜேஸ்வரியையும், பிறந்த குழந்தையையும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தாயும் - சேயும் நலமுடன் உள்ளனர். இதை அறிந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் டிரைவர் சதீஷ், ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மேகலா ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்