மாவட்ட செய்திகள்

தீபாவளி பரிசு வழங்கக்கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தீபாவளி பரிசு வழங்கக்கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

புதுச்சேரி,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்களுக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த ஆண்டு தீபாவளி நெருங்கிய நிலையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு மட்டும் தீபாவளி பரிசாக அவர்களது வங்கிக்கணக்கில் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தப்பட்டது.

ஆனால் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசு ஏதும் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் தீபாவளி பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கக்கோரி அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.) புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. புதுவை பிரதேச தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க செயலாளர் சீனுவாசன், பொருளாளர் பிரபுராஜ் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தினர் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு