ஸ்ரீவைகுண்டம்,
பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 துணை ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் ஜோபிரகாஷ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சங்கர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் பிரேம்வெற்றி, இணை செயலாளர் மாரியப்பன், பொருளாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.