மாவட்ட செய்திகள்

ஜவ்வாதுமலை கோடை விழா இடத்தினை கலெக்டர் நேரில் ஆய்வு

ஜவ்வாதுமலை கோடை விழா நடைபெறும் இடத்தினை கலெக்டர் கந்தசாமி நேரில் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

கலசபாக்கம்,

ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம், ஜமுனாமரத்தூரில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ஜவ்வாதுமலை வட்டார செயல் திட்டம் தயாரிப்பது குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வனத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பாக தனித்தனியாக ஜவ்வாதுமலை மக்களின் வளர்ச்சிக்கு தேவையான விரிவான செயல் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, அனைத்து துறை அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

கலெக்டர் ஆய்வு

இதையடுத்து கலெக்டர் கந்தசாமி, ஜவ்வாதுமலை கோடை விழா நடைபெறுவதற்கான இடத்தினை ஜமுனாமரத்தூர் ஏரி அருகிலும், ஜமுனாமரத்தூர் ஆலங்காயம் சாலையில் அமைந்துள்ள திறந்தவெளி இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் கோவிலூர் ஊராட்சி, அத்திப்பட்டு கிராமத்தில் பொதுப்பணித்துறை மூலம் ரூ.2 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஜமுனாமரத்தூர் ஐ.டி.ஐ.யின் புதிய கட்டிட பணிகளையும், தாட்கோ மூலமாக ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆண்கள் தங்கும் விடுதி கட்டிட பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு