மாவட்ட செய்திகள்

துபாயில் இருந்து சென்னைக்கு ‘எமர்ஜென்சி’ விளக்கில் மறைத்து ரூ.1 கோடி தங்க கட்டிகள் கடத்தல்

துபாயில் இருந்து சென்னைக்கு ‘எமர்ஜென்சி’ விளக்கில் மறைத்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர்.

அப்போது மங்களூருவைச் சேர்ந்த முகமது அரபாத் (வயது 24) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

ரூ.1 கோடி தங்கம்

அதில் எமர்ஜென்சி விளக்கு ஒன்று இருந்தது. ஆனால் அது வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுடன் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், எமர்ஜென்சி விளக்கை பிரித்து பார்த்தனர்.

அதில் பேட்டரிக்கு பதிலாக தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முகமது அரபாத்தை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்