மாவட்ட செய்திகள்

போலி மருத்துவ உபகரணம் கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி - தொழில் அதிபர் மீது போலீசில் புகார்

போலி மருத்துவ உபகரணம் கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக தொழில் அதிபர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

திரு.வி.க. நகர்,

சென்னை பாடியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 40). இவர், மருத்துவ உபகரணங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கொரோனா காலத்தில் அதிக அளவில் விற்பனையாக கூடிய ஆக்சி மீட்டர் வாங்கி விற்க முடிவு செய்தார். இதற்காக தேனாம்பேட்டையில் உள்ள மொத்த வியாபாரியான தொழில் அதிபர் ராகேஷ்குமார் என்பவரை அணுகினார். இதற்காக அவரிடம் ரூ.10 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட ராகேஷ்குமார், முதல் கட்டமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆக்சி மீட்டர் கருவிகளை கொடுத்தார்.

ஆனால் அவை போலி என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத்குமார், போலியான ஆக்சி மீட்டரை திரும்ப பெற்றுக்கொண்டு, தான் கொடுத்த ரூ.10 லட்சத்தை தரும்படி ராகேஷ்குமாரிடம் கேட்டார். ஆனால் 3 மாதம் கடந்த நிலையிலும் வினோத்குமாரிடம் பணத்தை திருப்பி கொடுக்காததால் இதுகுறித்து கொரட்டூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்