மாவட்ட செய்திகள்

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.13 ஆயிரம் மோசடி

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.13 ஆயிரம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை.

சென்னை,

சென்னை கோட்டூர்புரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 58). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் பூமிநாதன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி கிரெடிட் கார்டு விவரங்கள் குறித்து கேட்டுள்ளார்.

அந்த ஆசாமி வங்கி அதிகாரி என்று நம்பி, தனது கிரெடிட் கார்டு குறித்த தகவல்கள் மற்றும் தனது செல்போன் எண்ணுக்கு வந்த ஓ.டி.பி. ரகசிய எண்ணையும் பூமிநாதன் கூறியுள்ளார். சிறிது நேரத்திலேயே பூமிநாதன் வங்கி கணக்கில் இருந்து ரூ.13 ஆயிரம் எடுக்கப்பட்டதாக, அவரது செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பூமிநாதன், இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மயிலாப்பூர் துணை கமிஷனர் அலுவலக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை