மாவட்ட செய்திகள்

ஷேர் மார்க்கெட்டில் ரூ.25 லட்சம் நஷ்டம்: பட்டதாரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை

ஷேர் மார்க்கெட்டில் ரூ.25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தி அடைந்த பட்டதாரி வாலிபர். உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்தார்.

தினத்தந்தி

திரு.வி.க. நகர்,

சென்னை முகப்பேர் மேற்கு 2-வது பிரதான சாலையை சேர்ந்தவர் கவின் கார்த்திக் (வயது 34). பட்டதாரியான இவர், ஆன்லைன் மூலம் ஷேர் மார்க்கெட்டில் பண பரிவர்த்தனை செய்து வந்தார். அதற்கான பணத்தை தனது தந்தையின் பெயரில் உள்ள வீட்டை அடமானம் வைத்து செலுத்தினார். ஆனால் அதில் ரூ.25 லட்சம் வரை அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தீக்குளித்து தற்கொலை

இதனால் விரக்தி அடைந்த கவின் கார்த்திக், தனது வீட்டின் மொட்டை மாடியில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த கவின் கார்த்திக், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கவின் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்