தமிழகத்தில் அடுத்த மாதம் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், நேற்று கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் செலவு கண்காணிப்பு பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்றை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர்.
அந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகுரு தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஷ் முன்னிலையில் கும்மிடிப்பூண்டி சார்-நிலை கருவூலத்தில் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது.