மாவட்ட செய்திகள்

சென்னை தாம்பரத்தில் மோட்டார்சைக்கிள் விற்பனை நிலையத்தில் ரூ.4 லட்சம் திருட்டு

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரைச் சேர்ந்தவர்ஜேக்கப் தியோடர் (வயது 56). இவர், சேலையூர் அருகே தாம்பரம்-வேளச்சேரி சாலையில் புதிய மோட்டார்சைக்கிள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார்.

தினத்தந்தி

நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது, 3-வது மாடியில் உள்ள இரும்பு கதவின் பூட்டை ஆக்சா பிளேடால் அறுத்து அதன் வழியாக உள்ளே புகுந்த மர்மநபர்கள், கடையின் கல்லாப்பெட்டியில் வைத்து இருந்த ரூ.4 லட்சத்தை திருடிச்சென்றது தெரிந்தது.

மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் கம்ப்யூட்டர் டி.வி.ஆர். கருவியையும் எடுத்து சென்றுவிட்டனர். இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்