மாவட்ட செய்திகள்

ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரத்தில் விவசாயி வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

விழுப்புரம்,

விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை பகுதியை சேர்ந்தவர் கலியன் (வயது 40), விவசாயி.இவர் நேற்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.

பின்னர் மதியம் அங்கிருந்து புறப்பட்டு தனது வீட்டிற்கு கலியன் வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார்.

உடனே வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றிருந்த சமயத்தில் பட்டப்பகலில் யாரோ மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவு தாழ்பாளை உடைத்து, உள்ளே புகுந்து கள்ளச்சாவி மூலம் பீரோவை திறந்து அதிலிருந்த நகை- பணத்தை கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகை, பணத்தின் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு