திருவாரூர்,
விடுமுறை இல்லாமல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பணிபுரிய நிர்பந்தம் செய்வதை கைவிட வேண்டும். ஜல்ஜீவன் மிஷன் கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் வசந்தன், மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட பொருளாளர் சுந்தரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு கணக்கெடுப்பு, பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டப்பணிகள் ஆகிய ஊழியர் விரோத போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.