கொடைக்கானல்:
கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையொட்டி கொடைக்கானலில் பொதுமக்கள் வசதிக்காக வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் மளிகைப்பொருட்கள் விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
இதனை கொடைக்கானல் ஆர்.டி.ஓ. சிவகுமார் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், வியாபாரிகள் அனைவரும் முககவசம் அணிந்து வியாபாரத்தில் ஈடுபட வேண்டும்.
சமூக இடைவெளியுடன் காய்கறிகளையும் பொருட்களையும் வழங்க வேண்டும். விலைப்பட்டியலை வாகனத்தின் முன்பகுதியில் ஒட்டவேண்டும். விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் தாசில்தார் சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.