மாவட்ட செய்திகள்

சாம்பார் வெங்காயம் விலை புதிய உச்சத்தை தொட்டது கிலோ ரூ.150-க்கு விற்பனை

வேலூரில் சாம்பார் வெங்காயம் விலை புதிய உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தினத்தந்தி

வேலூர்,

பொதுமக்கள் சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தக்கூடிய வெங்காயத்தின் விலை கடந்தசில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. அதுவும் மராட்டியம், கர்நாடகத்திலிருந்து வரும் பெரிய வெங்காயத்தின் விலை மிகவும் குறைவாகவே காணப்படும். வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு கர்நாடகா மாநிலத்தில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதேபோன்று சாம்பார் வெங்காயம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்படுகிறது.

பெரிய வெங்காயம் ஒருநாளைக்கு 7 லாரிகளில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மழை காரணமாக அதன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஒரு நாளைக்கு 2 லாரிகளில் மட்டுமே பெரிய வெங்காயம் வருகிறது. அதுவும் புதிய வெங்காயம், பழைய வெங்காயம் என இரண்டு ரகமாக விற்பனைக்கு வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு