மாவட்ட செய்திகள்

கண்மாயில் மண் அள்ளிய லா உரிமையாளர் கைது

ரெட்டியார்சத்திரம் அருகே கண்மாயில் மண் அள்ளிய லாரி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே அழகுபட்டி கண்மாயில் இரவு நேரங்களில் டிப்பர் லாரிகளில் மண் அள்ளுவதாக ரெட்டியார்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது திண்டுக்கல்-பழனி சாலையில் முத்தனம்பட்டி பிரிவு அருகே மண் ஏற்றி வந்த லாரியை போலீசார் நிறுத்தினர்.

உடனே லாரியை நிறுத்தி விட்டு டிரைவரும், அவருடன் வந்தவரும் தப்பியோடி விட்டனர். அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், லாரியின் உரிமையாளர் வேடசந்தூர் அருகேயுள்ள செட்டமாயனூரை சேர்ந்த சந்தனதேவன் என்ற சந்தனம் (வயது 34) என்றும், லாரியில் அனுமதியின்றி கண்மாயில் மண் அள்ளி வருவதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தனத்தை கைது செய்தனர். தப்பியோடிய செட்டமாயனூரை சேர்ந்த லாரி டிரைவர் மருதுபாண்டி, தரகர் சரவணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்