மாவட்ட செய்திகள்

பொதுப்பணித்துறை அலுவலகத்தை மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட முயற்சி

பொதுப்பணித்துறை அலுவலகத்தை மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட முயன்றனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று காலை சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். பொருளாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் உள்ள காவிரி, கொள்ளிடம் ஆற்றில் முறையாக குவாரி அமைத்து மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும். மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு என்று மாயனூர் முதல் கல்லணை வரை 3 கிலோ மீட்டர் இடைப்பட்ட தூரத்திற்கு ஒவ்வொரு இடத்தில் தனியாக குவாரி அமைக்க வேண்டும். ஏழை, எளியவர்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு மணல் ஏற்றுமதி செய்வதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக அவர்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர். இதைத்தொடர்ந்து போராட்டம் நடத்த வந்தவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதனால் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை