இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய இணை அமைச்சரும், அரக்கோணம் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத் துறை அமைச்சர் ஆவடி
சா.மு.நாசர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் கூளூர் ராஜேந்திரன், மகாலிங்கம், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.