மாவட்ட செய்திகள்

பஸ் மோதி பள்ளி மாணவன் பலி

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே பஸ் மோதியதில் பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

தினத்தந்தி

தேனி :

தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஆத்தியப்பன் (வயது 48).

நேற்று இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் கடமலைக்குண்டுக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்தார்.

கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டி என்னுமிடத்தில் சாலையை அவர் கடக்க முயன்றார்.

அப்போது வருசநாட்டில் இருந்து மதுரை மாவட்டம் திருமங்கலம் நோக்கி சென்ற தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க டிரைவர் திருப்பினார்.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

அப்போது சாலையோரம் நடந்து சென்ற கடமலைக்குண்டுவை சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வக்குமார் (16) மீது பஸ் மோதியது. தொடர்ந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி நின்றது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். பஸ்சில் வந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த கடமலைக்குண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

படுகாயம் அடைந்த ஆத்தியப்பனையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பஸ் டிரைவர் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த செல்வக்குமார் கடமலைக்குண்டு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்