மாவட்ட செய்திகள்

தொழிற்சாலை செயல்பாடு குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் கூச்சல், குழப்பம்

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையின் செயல்பாடு குறித்து கிராம மக்களிடையே நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது.

தினத்தந்தி

தொழிற்சாலை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமாக கார்பன் துகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கார்பன் துகள்களால் அருகே உள்ள பாப்பன்குப்பம் கிராமத்தில் உள்ள நீர் நிலைகள் மற்றும் வீடுகளில் கருந்திட்டாக கரி துகள்கள் படிவதாக கூறப்படுகிறது. மேலும், இதனால் கிராம மக்கள் பலருக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பாப்பன்குப்பம் கிராமத்தை சேர்ந்த 30 பெண்கள் உள்பட மொத்தம் 80 பேர் தொழிற்சாலையை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தனியார் தொழிற்சாலையின் உற்பத்தி அன்றைய தினம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கூச்சல், குழப்பம்

நேற்று மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் காமராஜ் தலைமையில் பாப்பன் குப்பம் கிராமத்தில் பொதுமக்களிடம் தொழிற்சாலை நிர்வாகத்தினர் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது தொழிற்சாலையால் கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு வருவதாகவும், கரி துகள்கள் நிறைந்த சாப்பாட்டை சாப்பிடக்கூட முடியவில்லை என்றும், பெண்கள் தொழிற்சாலை நிர்வாகிகளை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் நிலவியது.

இதற்கிடையில், கிராம மக்களில் ஒரு சிலர் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தனர். இதன் பின்னர், கார்பன் துகள்கள் வெளியேறாத வகையில் செயல்பட வேண்டும் என்று தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் காமராஜ் அறிவுறுத்தினார்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்