மாவட்ட செய்திகள்

விவசாயிக்கு அரிவாள் வெட்டு-ஒருவர் கைது

விவசாயிக்கு அரிவாள் வெட்டு-ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

ஆவூர், ஜூன்.1-
மாத்தூர் அருகே உள்ள செங்களூர் வடக்கிபட்டியை சேர்ந்தவர் அசோகன் (வயது 41). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வயலில் பாய்ந்து கொண்டிருந்த தண்ணீர் உடைத்துக்கொண்டு அதே ஊரை சேர்ந்த குணசேகரன் (45) என்பவரின் அறுவடைக்கு தயாரான நெல்வயலில் பாய்ந்ததாக தெரிகிறது. இது பற்றி கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குணசேகரன் தான் வைத்திருந்த அரிவாளால் அசோகனை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அசோகன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?