மாவட்ட செய்திகள்

திருக்கழுக்குன்றத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 4 கடைகளுக்கு 'சீல்'

திருக்கழுக்குன்றத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 4 கடைகளுக்கு 'சீல்'.

தினத்தந்தி

கல்பாக்கம்,

கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணிவரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அரசு அனுமதித்துள்ளது. இந்த நிலையில் திருக்கழுக்குன்றத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சில கடைகள் செயல்பட்டன. தகவலறிந்த வருவாய்துறையினர் அந்த கடைகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.

குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் 4 கடைகள் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 மளிகை கடைகள், பழக்கடை மற்றும் இரும்பு கடைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்