மாவட்ட செய்திகள்

மணல் அள்ளிய டிராக்டர் பொக்லைன் எந்திரம் பறிமுதல்

மணல் அள்ளிய டிராக்டர் பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இளையான்குடி,ஜூன்

இளையான்குடி அருகே சண்முகநாதபுரம் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணைக்குட்டையில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு மணல் அள்ளிக் கொண்டிருந்த டிராக்டர், பொக்லைன் டிரைவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதைத் தொடர்ந்து டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரத்தை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் இது தொடர்பாக வரதராஜன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.