பேட்டை:
சுத்தமல்லி இந்திரா காலனியை சேர்ந்தவர் ராதிகா (வயது 40). அதே பகுதியை சேர்ந்தவர் மாடசாமி மகன் கொம்பையா (27). இவர் ராதிகாவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராதிகாவின் உறவினரான கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (26) என்பவர் கொம்பையாவிடம் தட்டி கேட்டுள்ளார். இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கொம்பையா அரிவாளால் அருணாசலத்தை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து கொம்பையாவை தேடி வருகிறார்.