மாவட்ட செய்திகள்

குடிநீர் இணைப்பு வழங்காததால் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

குடிநீர் இணைப்பு வழங்காததால் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

தினத்தந்தி

பொள்ளாச்சி

குடிநீர் இணைப்பு வழங்காததால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பொதுமக்கள் முற்றுகை

பொள்ளாச்சி அருகே உள்ள சோமந்துறைசித்தூர் ஊராட்சி பகுதிகளில் ஜல்ஜீவன் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வைப்பு தொகை பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்டது.

ஆனால் குடிநீர் இணைப்பு வழங்காமல் ஊராட்சி நிர்வாகம் இழுத்தடித்த தாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பணிகள் இன்னும் முடிக்கவில்லை என்றும், பணிகள் முடிந்த பின்னர் குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

ஆனைமலை ஒன்றியம் சோமந்துறைசித்தூர் ஊராட்சியில் குடிநீர் இணைப்பிற்கு ரூ.3,680 பெற்றுக் கொண்டனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் தங்களுக்கு தேவையான நபர்களுக்கு மட்டும் குடிநீர் இணைப்பு வழங்கி வருகிறார்கள்.

உடனடியாக இணைப்பு

மேலும் குடிநீர் இணைப்பு வழங்க ரோட்டில் குழி தோண்டி உள்ளனர். ஆனால் இணைப்பு கொடுக்காததால் குழிகளில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அத்துடன் சாலை பள்ளமாக உள்ளதாக பலர் விழுந்து காயம் அடைந்து உள்ளனர்.

எனவே வைப்பு தொகை செலுத்திய அனைவருக்கும் உடனடி யாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். மேலும் குடிநீர் கட்டணம் பெற்றுக் கொண்டதால் வரும் ஆண்டிற்கு வரி செலுத்தாமல் விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்