மாவட்ட செய்திகள்

மழலையர் பள்ளிகளுக்கு அரசு வகுத்துள்ள விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும்

மழலையர் பள்ளிகளுக்கு அரசு வகுத்துள்ள விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினத்தந்தி

திருச்சி,

தமிழ்நாடு இளம் மழலையர் பள்ளிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் கவுதம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ரவீந்திரன் கலந்து கொண்டார். இதில் பொதுச்செயலாளர் தியாகராஜன், பொருளாளர் சத்யரேகா, துணைத்தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அனைத்து மழலையர் பள்ளிகளும் குழந்தைகள் பாதுகாப்பில் அக்கறையுடன் சட்டதிட்டங்களை மதித்து செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு 2015-ம் ஆண்டில் அறிவித்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்த முடியாதபடி உள்ளதால் பள்ளிகள் அங்கீகாரம் பெற முடியாமல் உள்ளன.

ஆகவே இதில் முதல்-அமைச்சர் தலையிட்டு புதிய எளிமையான விதிமுறைகளை வெளியிட வேண்டும்.

ஒவ்வொரு இளம் மழலையர் பள்ளியிலும் 5 முதல் 10 பெண்கள் நேரடி வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் இளம் மழலையர் பள்ளிகள் உள்ளன.

அதன் மூலம் 25 ஆயிரம் பெண்கள் நேரடி வேலைவாய்ப்பும், 2 லட்சம் பெண்கள் மறைமுக வேலைவாய்ப்பும் பெறுகிறார்கள். ஆகவே இந்த பிரச்சினையில் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்