ஆம்பூர்,
ஓம்சக்தி சாமுவேலின் மனைவி ஜாய்சி. பாப்பார கெங்கையம்மன் கோவிலில் பெரிய வேப்பமரம் உள்ளது. அந்த வேப்பமரத்தில் காகங்கள் அதிகளவில் இருக்கும்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓம்சக்தி சாமுவேல் - ஜாய்சி தம்பதியினர் காகங்களுக்கு உணவு வைக்க ஆரம்பித்தனர். நாட்கள் செல்ல, செல்ல அதில் 2 காகங்கள் மட்டும் இந்த தம்பதியினர் கையில் அமர்ந்து கையில் வைத்திருக்கும் உணவு மற்றும் தானியங்களை சாப்பிட்டு செல்ல ஆரம்பித்தது. இப்போது அந்த காகங்கள் அவர்களது கழுத்து மீதும் தலைப்பகுதியிலும் நின்று அந்த உணவை சாப்பிடுகிறது.
தற்போது தினமும் 3 வேளைகளிலும் குறிப்பாக காலை 6.30 மணி, பிற்பகல் 11.30 மணி, மாலை 5.30 மணி ஆகிய 3 நேரமும் தவறாமல் வந்து தம்பதியினர் கையில் நின்று காகம் உணவு அருந்தி செல்வதை வழக்கமாக்கி விட்டது. இதனை அந்த பகுதி மக்கள் வியப்புடன் பார்க்கின்றனர்.