மாவட்ட செய்திகள்

மது, புகையிலை விற்ற 16 பேர் சிக்கினர்

நெல்லை மாவடடத்தில் மது, புகையிலை விற்ற 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்வோர், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டிருந்தார். இதையொட்டி போலீசார் தீவிர சோதனை, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 29 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3,190 மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் நெல்லை மாநகரில் மது விற்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 46 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் புகையிலை பொருட்கள் விற்றதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 11 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை